ஓ.ஏ.பி., பெற்று தருவதாக கூறி தாசில்தார் ரூ.29 லட்சம் மோசடி?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
09:29

கிருஷ்ணகிரி: ஓ.ஏ.பி., பெற்று தருவதாகக்கூறி தாசில்தார் அவரது உதவியாளர்கள், 29.40 லட்சம் ரூபாயை ஏமாற்றியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்தனர்.


கிருஷ்ணகிரி தாலுகா சந்தாபுரம் அடுத்த மூலிகாசவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் சகோதரி, 55. இவர், 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் நேற்று கலெக்டர் பிரபாகரிடம் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஏழை எளிய முதியோர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை தாசில்தார் அலுவலகம் மூலம் பெற்றுக் கொடுத்து வரும் பணியை செய்து வந்தேன். கடந்த, 2011ல், அம்மா திட்டத்தில் அனைத்து முதியோர்களுக்கும் உதவித்தொகை வாங்கித் தருவதாக, கிருஷ்ணகிரி தாசில்தார் கன்னியப்பன், அவரது உதவியாளர்கள் குமரேசன், புஷ்பராஜ் ஆகியோர் கூறினர். இதனால், எங்கள் பஞ்., சுற்றுவட்டாரத்தை சேர்ந்த முதியவர்களிடமிருந்து அவ்வப்போது, தலா 4,200 ரூபாய் வீதம், 700 பேரிடம் மொத்தம், 29 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொடுத்துள்ளேன். அதற்கான ஆணையையும் அவர்கள் வழங்கினர். ஆனால், இன்று வரை, ஓ.ஏ.பி., வரவில்லை. இது குறித்து, தாசில்தாரிடம் கேட்டால், வந்துவிடும் என, மாதக்கணக்கில் கூறி வருகிறார். பணத்தை கொடுத்துவிட்டு, ஓ.ஏ.பி., வரவில்லை என, முதியவர்கள் தொந்தரவு செய்கின்றனர். இது குறித்து விசாரித்து, பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இது குறித்து, மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறியதாவது: சகோதரி என்பவரது மனு குறித்து விசாரிக்கப்பட்டது. இது தொடர்பாக, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X