ஈரோட்டில் ஒரே இடத்தில் மஞ்சள் ஏலம்: கருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
09:41

ஈரோடு: கருத்து கேட்பு கூட்டத்தில், ஈரோட்டில் ஒரே இடத்தில் மஞ்சள் ஏலம் நடத்த, விவசாயிகள் வலியுறுத்தினர்.


ஈரோட்டில், திங்கள் முதல், வெள்ளி வரை, ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, நான்கு இடங்களில் மஞ்சள் ஏலம் நடக்கிறது. இதை ஒரே இடத்தில் நடத்த, கோரிக்கை குறித்த கருத்து கேட்பு மற்றும் முத்தரப்பு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை வகித்தார். மாவட்ட விற்பனை குழு செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்தார்.


விவசாயிகள் கூறியதாவது: கீழ்பவானி விவசாயிகள் சங்க செயலாளர் நல்லசாமி: கடந்த, 1996 முதல் இப்பிரச்னை தொடர்கிறது. நான்கு இடங்களில் ஏலம் நடப்பதால், தினமும் நான்கு இடங்களுக்கும் விவசாயிகள், வியாபாரிகள் செல்ல முடியாததால், மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. இதில்லாமல் மூட்டையை எடை போட, தூக்கி அடுக்க ஒரு கூலி, வியாபாரிகள் மூட்டைக்கு வேறு கூலி, ஏற்றுமதி மூட்டைக்கு வேறு கூலி பெறுகின்றனர். தரம் பிரித்து, சரியான எடையுடன், ஒரே இடத்தில், விற்பனை குழு அல்லது சொசைட்டி அதிகாரிகள் மூலம் மட்டுமே ஏலம் நடத்த வேண்டும்.


தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன சபை தலைவர் தளபதி: ஒரே இடத்தில் ஏலம் நடத்த வேண்டும். மாதிரி வைக்கப்படும் மஞ்சளில் விவசாயி, வியாபாரி, குடோன் உரிமையாளர் பெயரை எழுதக்கூடாது. 'லாட்' எண், விலை மட்டும் குறிப்பிட்டால், மறைமுக ஏலமாக நடக்கும். அதிகாரிகள் மட்டுமே ஏலத்தை நடத்த வேண்டும். மற்றவர்களை அனுமதிப்பதால் தவறு நடக்கிறது.


காளிங்கராயன் பாசன சபை செயலாளர் வேலாயுதம்: விவசாயிகளுக்கு கடன் கொடுத்துவிட்டு, அவர்களது மஞ்சளை வியாபாரிகள், குடோன் உரிமையாளர்கள் வாங்கி கொள்கின்றனர். விவசாயிக்கு தெரியாமல், விற்று விடுகின்றனர். எனவே, விவசாயி அனுமதியின்றி, விலையை உறுதி செய்யாமல் விற்கக்கூடாது.


அகில இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க தலைவர் தெய்வசிகாமணி: குறிப்பிட்ட வியாபாரிகள் மட்டுமே, ஏலத்தில் பங்கேற்க முடியும் என்பதை மாற்றி, ஆன்லைனில் யார் வேண்டுமானாலும் ஏலம் கோர அனுமதித்தால், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.


கலெக்டர் கதிரவன்: ஒரே இடத்தில் ஏலம் நடத்துவது, விவசாயிகள், வியாபாரிகள் எளிதில் வந்து செல்லுதல், வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில், தரம் பிரித்து, கூடுதல் எடையின்றி ஏலம் நடத்த வழி செய்யப்படும். இப்பணிகள் தொடர் ஆய்வு செய்து, மூன்று மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக, மனு மூலம் யோசனை தெரிவித்தால் ஏற்கப்படும். அடுத்த, 15 நாளில் அடுத்த கூட்டம் நடத்தி, முன்னேற்றம் குறித்து விளக்கப்படும்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X