கோபி: கவுந்தப்பாடி அருகே சந்தை வளாகத்தில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல், கடந்த, 15ம் தேதி, கிடந்தது. சிமென்ட் கலர் பனியன், கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார். கவுந்தப்பாடி போலீசார், உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார் என்பது குறித்து, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
* கொடுமுடி, கொல்லங்கோவில் பேரூராட்சி, பச்சாக்கவுண்டன்வலசு பிரிவு ரோடு அருகே, சாக்கடையில் நேற்று, அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. வி.ஏ.ஓ., செந்தில்குமார் புகாரின்படி, சிவகிரி போலீசார் சடலத்தை மீட்டனர். உடற்கூறு பரிசோதனை செய்து புதைத்தனர். இறந்தவருக்கு, 50 வயது இருக்கும். உடலில் காயங்கள் இல்லை. தலையில் சிராய்ப்பு காயம் மட்டும் இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.