ஆறு வயது சிறுவனை கடித்த தெருநாய்: பி.பெ., அக்ரஹார பகுதி மக்கள் பீதி | ஈரோடு செய்திகள் | Dinamalar
ஆறு வயது சிறுவனை கடித்த தெருநாய்: பி.பெ., அக்ரஹார பகுதி மக்கள் பீதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
09:45

ஈரோடு: பி.பெ., அக்ரஹாரம் பகுதியில், விளையாடிக் கொண்டிருந்த சிறுவை, தெருநாய் கடித்துக் குதறிய சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.


நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜபிரபு, 29; இவரின் மனைவி சரண்யா, 27; இவர்களின் மகன் நிகில் ஸ்டான்லி, 6; அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறார். இரண்டாவது பிரசவத்துக்காக, ஈரோடு பி.பெ. அக்ரஹாரம் காமராஜர் வீதியில் உள்ள, தாய் வீட்டுக்கு சரண்யா வந்துள்ளார். நிகில் ஸ்டான்லி, வீட்டுக்கு வெளியே நேற்று காலை விளையாடி கொண்டிருந்தான். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த தெருநாய், திடீரென சிறுவனை கடித்து குதறியது. சிறுவனின் அலறல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் நாயை விரட்டி, சிறுவனை மீட்டனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஈரோடு மாநகரில், தெருநாய் தொல்லை அதிகரித்து விட்டதாக, மக்கள் ஏற்கனவே புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரும் அளித்துள்ளனர். மனு கொடுத்த ஒரு சிலர், பீட்டாவிடம் முறையிட வேண்டியதுதானே? என்ற, மிகச்சிறந்த பதிலை பெற்று, அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இந்நிலையில்தான், வீட்டுக்கு வெளியில் விளையாடிய, வெளியூர்கார சிறுவனை, நம்ம ஊரு நாய் கடித்து, அவர்களின் மாவட்டம் வரை, நம்ம ஊரு புகழை பரவச் செய்துள்ளதாக, அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X