| கல்லூரி செல்லவிருந்த மாணவர் விபத்தில் பலி Dinamalar
கல்லூரி செல்லவிருந்த மாணவர் விபத்தில் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
09:45

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே, டூவீலர் மீது கார் மோதிய விபத்தில், கல்லூரி செல்லவிருந்த மாணவர் இறந்தார். புன்செய்புளியம்பட்டியை அடுத்த, விண்ணப்பள்ளி, புதுரோடு, நம்பியூர்காரர் தோட்டத்தை சேர்ந்த விவசாயி ஜெகநாதன். இவரின் மகன் சஞ்சய், 18; பிளஸ் 2 முடித்துவிட்டு, கல்லூரி செல்லவிருந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில், சத்தி சாலையில் ஸ்பிளென்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில் சென்றார். புதுரோடு பஸ் நிறுத்தம் அருகே, எதிரே கோவையில் இருந்து கர்நாடகா மாநிலம், பெங்களூரு சென்ற, நானோ கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சஞ்சய், தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியில் இறந்தார். கார் டிரைவர் கார்த்தி காயமடைந்தார். கல்லூரி செல்லவிருந்த மாணவர், விபத்தில் பலியானது, பெற்றோர், உறவினர்களை மாளாத சோகத்தில் ஆழ்த்தியது.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X