| கலெக்டர் அலுவலக வளாகத்தில் மூதாட்டி தற்கொலை முயற்சி Dinamalar
கலெக்டர் அலுவலக வளாகத்தில் மூதாட்டி தற்கொலை முயற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
13:58

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், மூதாட்டி ஒருவர் தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கடவூர் அருகே, பாலவிடுதி கஸ்தூரி குரும்பட்டியை சேர்ந்த சந்திரா, 40 என்பவர், பகல், 12:00 மணிக்கு மனு கொடுக்க வந்தார். அப்போது, பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள், பாட்டிலை பிடுங்கி வீசினர். பின், போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது: கடவூர் அருகே, செம்பியநத்தம் கிராமத்தில், எனக்கு சொந்தமான, 80 சென்ட் நிலம் உள்ளது. அதை சிலர் ஆக்கிரமித்துக் கொண்டனர். நிலத்தை கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கின்றனர். பாலவிடுதி போலீசாரிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் பலனில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X