| மறுவாழ்வு நிதி வழங்கல் Dinamalar
மறுவாழ்வு நிதி வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
14:08

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில், கொத்தடிமை தொழிலாளர் பணிபுரிவது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், சப்- கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில், மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாதேஸ்வரன், மோகனூர் தாசில்தார் செல்வராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர், கடந்த,27ல் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெருமாள் என்பவர், கொத்தடிமை தொழிலாளியாக பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டார். அதையடுத்து, கோழிப்பண்ணை உரிமையாளர் மீது, கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. மீட்கப்பட்ட பெருமாளுக்கு, கொத்தடிமை மறுவாழ்வு நிதியாக, 20 ஆயிரம் ரூபாயை, கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X