நாமக்கல்: நாமக்கல் அருகே, இலவச பட்டா மற்றும் அடிப்படை வசதி கேட்டு, கலெக்டரிடம் மக்கள் மனு அளித்தனர். அதன் விபரம்: நாமக்கல் வள்ளிபுரம், தொட்டியப்பட்டி ஊராட்சி கோணாம்பரப்பையில் வசித்து வருகிறோம். இலவச பட்டா, வீட்டு ரசீது, மின் வசதி, சாலை வசதி இல்லாமல் உள்ளோம். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, அதிகாரிகள் எங்கள் பகுதியில் நேரில் ஆய்வு செய்து பட்டா, ரசீது, மின்சாரம், சாலை வசதி ஆகியவை கிடைக்கப் பெற வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.