| கோவிலை சேதப்படுத்திய யானைகள்: தொழிலாளர்களை துரத்தியதால் ஓட்டம் Dinamalar
கோவிலை சேதப்படுத்திய யானைகள்: தொழிலாளர்களை துரத்தியதால் ஓட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
22:04

கூடலுார்:கூடலுார், பாண்டியார் டான்டீ தொழிலாளர்கள் குடியிருப்பை ஒட்டிய புல்வெளிகளில் காட்டு யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. நேற்று, அதிகாலை அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நுழைந்த யானைகள், கோவில் இரும்பு ஷட்டர், ஸ்டோர் ரூம் மற்றும் அதிலிருந்த பொருட்களை சேதப்படுத்தின.


அங்கிருந்து சென்ற யானைகள் அருகேயுள்ள புல்வெளிகளில் மேய்ச்சலில் ஈடுப்பட்டன. தொழிலாளர்கள் கோவிலுக்கு சென்று, பார்த்த அதிர்ச்சி அடைந்தனர். தகவலின் பேரில், வனக்காப்பாளர் மில்டன்பிரபு, வன ஊழியர்கள் கோவிலை ஆய்வு செய்தனர்.இந்நிலையில், புல்வெளிகளில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஐந்து யானைகள், காலை, 8:15 மணிக்கு திடீரென, தேயிலை தோட்டத்தில் நுழைந்து, அங்கு இலை பறித்த பெண் தொழிலாளர்களை துரத்தின. அதிர்ச்சி அடைந்த, 40 பெண் தொழிலாளர்கள் அலறியடித்து ஓடி கோவிலுக்குள் சென்று தப்பினர். பின், அங்கிருந்தவர்கள் சப்தமிட்டு, யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், யானைகளிடமிருந்து பாதுகாப்பு கோரி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


டான்டீ மேலாளர் ஸ்ரீதரன், தொழிலாளர்களை சமாதானப்படுத்தி, 'பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும்,' என, உறுதியளித்தார். அதனை ஏற்று தொழிலாளர்கள் காலை, 10:30 மணிக்கு பணிக்கு திரும்பினர்.தொழிலாளர்கள் கூறுகையில், 'இப்பகுதிக்கு வரும் யானைகள், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக கோவிலுக்குள் வந்து, பொருட்களை சேதம் செய்து வருகின்றன. இதுவரை எங்களுக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்த வில்லை,' என்றனர். அப்பகுதியில் முகாமிட்ட யானைகளை, விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X