ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற உத்தரவு: ஜமாபந்தி கூட்டத்தில் மனு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
22:05

பந்தலுார்:'பந்தலுார் தாலுகாவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.பந்தலுாரில் நேற்று துவங்கிய ஜமாபந்தி கூட்டத்தில் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். எம்.எல்.ஏ., திராவிடமணி முன்னிலை வகித்தார்.ஆர்.டி.ஓ., ராஜ்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''மக்களின் குறைகளையும், புகார்களையும் உடனுக்குடன் நேரில் ஆய்வு செய்து தீர்வு காணப்பட வேண்டும்.


அரசு நிலங்கள், மயானங்கள் ஆக்கிரமித்திருப்பது தெரியவந்தால் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். அதேபோல, ஓய்வூதியம் வேண்டி விண்ணப்பித்தால், நேரடி விசாரணை செய்து, உடனடியாக வழங்கவும், சான்று கோரி விண்ணப்பித்தால் அலை கழிக்காமல் உடனுக்குடன் தீர்வு கிடைக்கும் வகையிலும் அதிகாரிகள் செயல்பட வேண்டும்,'' என்றார்.


தொடர்ந்து, பல்வேறு குறைகள் அடங்கிய, 170 மனுக்கள் பெறப்பட்டன. அதில், தகுதியுள்ளவர்கள் ஆய்வு செய்யப்பட்டு, உடனடியாக, 10 பேருக்கு முதியோர் ஓய்வூதியம்; 5 பேருக்கு விவசாய நிதியுதவி; 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவுகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் வழங்கிய மனுக்களை உடனடியாக ஆய்வு செய்து தனக்கு அறிக்கை அனுப்பிடவும் ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.முகாமில், வருவாய் துறை, வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் காமு நன்றி கூறினார்.* கூடலுாரில் இரண்டு நாள் ஜமாபந்தி முகாம், தாலுகா அலுவலகத்தில் துவங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்தார்.


முதல் நாளான நேற்று, தேவர்சோலை பிர்காவுக்கு உட்பட்ட ஸ்ரீமதுரை, செருமுள்ளி, நெலகோட்டை, முதுமலை கிராம மக்கள் பங்கேற்றனர். பொதுமக்களிடமிருந்து, 31 மனுக்கள் பெறப்பட்டன; 12 நபர்களுக்கு முதியோர் ஓய்வுதியத்துக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.முகாமில், கூடலுார் தாசில்தார் ரவி, சமூக நல பாதுகாப்பு தனி தாசில்தார் மகேஸ்வரி, ஜென்மம் நிலம் தாசில்தார் லோகநாதன், அரசு மருத்துவமனை டாக்டர் ஹரிஹரன், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இரண்டாவது நாளான இன்று, கூடலுார் பிர்காவுக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி முகாம் நடக்கிறது.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X