நெடுஞ்சாலை திட்டப் பணிகள் அதிகாரிகள் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
23:45

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அச்சுந்தன் வயல் முதல் பட்டிணம்காத்தான் வரை நெடுஞ்சாலை அமைக்கும் பணியில், சாலை தரமானதாக அமைகிறதா என்பதை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் மாரியப்பன் தலைமையிலான பொறியாளர்கள் குழு நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.ராமநாதபுரத்தில் பிரதான சாலையான அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையிலான சாலை 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தி, சென்டர் மீடியம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதற்காக சாலையின் ஓரத்தில் வடிகால்கள் அமைக்கும் பணி நடக்கிறது. பட்டிணம்காத்தான் பகுதியில் அமைக்கபட்டிருந்த சாலையின் தரத்தை பொறியாளர்கள் குழு ஆய்வு செய்தது. அமைக்கப்பட்டிருந்த சாலையில் குழி தொண்டி மண், கருங்கல், ஜல்லி, கற்கலவை, நிலக்கீல் போன்றவைகளை தரம்பிரித்து ஆய்வு மேற்கொண்டனர்.நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் மாரியப்பன் கூறுகையில், நான்கு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பணிகள் சிறப்பாக நடக்கிறது. அமையவிருக்கும் நான்குவழிச்சாலையின் அகலம் 15 மீ., தடுப்புசுவருக்கு இருபக்கமும் ஏழரை மீட்டர் அகலத்தில் சாலை அமைகிறது. சில இடங்களில் இது மாறுபடும். 2 அடி பள்ளம் தொண்டி சாலை அமைப்பதற்கான கலவைகள் எடுத்து சரியான ஈரப்பதத்தில் இருக்கிறதா, என ஆய்வு செய்கிறோம். சரியான பதத்தில் கலவைகள் இருந்தால்தான் ரோடு தரமானதாக இருக்கும், என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X