| கம்மாபுரத்தில் எலி பேஸ்ட் விற்க தடை Dinamalar
கம்மாபுரத்தில் எலி பேஸ்ட் விற்க தடை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
00:06

கம்மாபுரம்:கம்மாபுரம், ஊ.மங்கலம் பகுதி மளிகை கடைகளில், எலி பேஸ்ட் விற்பனை செய்யக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையில், நடந்த கூட்டத்தில், கம்மாபுரம், கோ.ஆதனுார், சிறுவரப்பூர் உள்ளிட்ட பகுதியிலுள்ள கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர். இதில், மாவட்டத்தில் எலி பேஸ்ட் சாப்பிட்டு, இறப்பது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க, மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், பூச்சி மருந்து கடைகளில் எலி பேஸ்ட் விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.அதேபோல், ஊ.மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில், அனைத்து கடை உரிமையாளர்களிடம், எலி பேஸ்ட் விற்பனை தடை குறித்து அறிவுறுத்தப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X