கப்பல் படையில் சேர பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
00:16

கடலுார்:இந்திய கப்பற்படை மற்றும் காவல் படையில் சேரும் மீனவ இளைஞர்களுக்கு 3 மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கலெக்டர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் என இருமுறை நடைபெறும் இந்திய கடலோர காவல்படை மற்றும் கப்பல் படை தேர்வுகளில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாலுமி மற்றும் செயலர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் 300 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அவர்களுக்கு உடற்தகுதி பயிற்சி மற்றும் எழுத்து தேர்வில் வெற்றி பெற 3 மாத கால சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேர மீனவர், மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள வாரிசுதாரர்கள், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சீருடை, காலணி, எழுது பொருட்கள், உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். மாதாந்திர உதவித் தொகை ரூ. ஆயிரம் வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பம் உள்ள கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடலுார் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, வரும் 28ம் தேதி மாலை 5:45 மணிக்குள் மீன்துறை உதவி இயக்குநர், கடலுார் மீன்பிடி துறைமுக வளாகம், முதுநகர் 607603 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் நேரிலும் கொடுக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X