பண்ருட்டி:மனநலம் பாதித்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை, மகளிர் போலீசார் கைது செய்தனர்.கடலுார் அடுத்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 19 வயது மன நலம் பாதித்த பெண்ணை வீட்டில் விட்டு விட்டு பெற்றோர், கடந்த 16ம் தேதி வீட்டில் சிதம்பரம் கோவிலுக்கு சென்று விட்டனர்.தனியாக இருந்த பெண்ணிடம், இதே பகுதியை சேர்ந்த சிவானந்தம் மகன் விமல்ராஜ் என்கிற சுப்பையன்,25; சில்மிஷம் செய்தார். அப்பெண் சத்தம் போடவே, கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார்.இது குறித்து பண்ருட்டி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து சுப்பையனை, 25; கைது செய்தனர்.