கடலுார்:கடலுார் ஆல்பேட்டை ரேஷன் கடையில் திருடுபோனது குறித்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.கடலுார், ஆல்பேட்டை மெயின்ரோட்டில் ரேஷன் கடை உள்ளது. கடையின் விற்பனையாளர் கணேசன் நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடைக்கு சென்றபோது கடை திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 30 கிலோ சர்க்கரை, டீ துாள் பாக்கெட் 50 திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.