கடலுார்:கடலுார் செம்மண்டலத்தில் அரசு பஸ் பழுதாகி பாதியில் நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர்.பண்ருட்டியிலிருந்து நேற்று காலை அரசு பஸ் ஒன்று கடலுார் நோக்கி வந்துகொண்டிருந்தது. பஸ்சில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ் கடலுார் செம்மண்டலம் தனியார் பெண்கள் கல்லுாரி அருகே வந்தபோது ,எதிர்பாராத விதமாக பஸ் கிரவுன் பழுதானது. இதனால் பஸ்சை இயக்க முடியாமல் பாதியில் நின்றது. கடலுார் பஸ் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் துாரத்தில் பஸ் பழுதாகி நின்றது. இதனால் சில பயணிகள் அந்த வழியாக வந்த டவுன் பஸ்சிலும், சிலர் ஆட்டோவிலும் சென்றனர்.