| குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது Dinamalar
குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
00:19

கடலுார்:சாராய வியாபாரியை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். கடலுார், திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் குமரய்யா தலைமையிலான போலீசார், கடந்த மாதம் 20ம் தேதி, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, திருவந்திபுரம் சாலைக்கரை அருகில் முட்புதரில் 6 லாரி டியூப்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக, பில்லாலி தொட்டியைச் சேர்ந்த பாபு, 57; என்பவரை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது, சாராயம் விற்பனை, கடத்தல் தொடர்பாக நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் 9 வழக்குகள், பண்ருட்டி மதுவிலக்கு பிரிவில் 1 வழக்கு என மொத்தம் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புச்செல்வனுக்கு, எஸ்.பி.,சரவணன் பரிந்துரை செய்தார்.இதற்கு கலெக்டர் ஒப்புதல் அளித்தார். சிறையில் உள்ள பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று, வழங்கினர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X