அலட்சியத்தால் அவலம்! எங்கு பார்த்தாலும் ஆக்கிரமிப்புகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
00:20

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டத்தில் எங்கும் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க தினமும் பொதுமக்கள் படும்பாடு சொல்லிமாளாது. இடையூறு தரும் இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளோ கண்டுக்காது அலட்சியம் காட்டுகின்றனர்.



மாவட்டம் முழுவதும் நகர்பகுதிகள் ,ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க இதை அகற்றுவதில் அரசு அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். இதனால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு தொடர்கிறது. ஒருசில ரோடுகள் குறுகியதாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.



கடைகாரர்களோ கடைகளில் வைக்க வேண்டிய பொருட்களை ரோடு வரை பரப்பி வைத்துள்ளனர். ரோடு ஓரங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாது ரோட்டில் நடந்து செல்வதால் எந்நேரமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.அருப்புக்கோட்டை தெற்கு தெரு பகுதியில் தளவாட சாமான்கள், மணல், ஜல்லி போன்றவற்றை ரோடு வரை பரப்பி வைத்துள்ளனர். இங்குள்ள திருச்சுழி ரோடு, மதுரை ரோடு பந்தல்குடி ரோடு பகுதிகளில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகம்.



அண்ணாசிலை பகுதிகளில் வாகனங்களை நிறுத்தியும், நடைபாதையில் கடைகளை வைத்தும் ஆக்கரிமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நிரந்தரமாக ஆக்கிரமிப்பு செய்து விடுகின்றனர். நகராட்சிகளில் உள்ள நகரமைப்பு பிரிவோ தங்களது பணியை கூட முறையாக செய்யாது வெறுமனே உள்ளது. இப்பிரிவிற்கு தலா இரண்டு அலுவலர்கள் வேறு . இவர்களின் 'ஆசி' யோடுதான் ஆக்கிரமிப்பு அதிகாரிப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மனசு வையுங்க சார்:


அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. நகராட்சி பகுதியில் அதிகபட்ச ஆக்கிரமிப்புகள் இருப்பது அதிகாரிகளுக்கு தெரிந்தும் நடவடிக்கை இல்லை. ஒட்டு மொத்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால் நகரில் போக்குவரத்து இடையூறு இல்லாமலும், பொதுமக்கள் சிரமமின்றி நடந்து செல்லவும் முடியும். இதற்கு அதிகாரிகள் தான் மனது வைக்க வேண்டும்.--ராஜசேகர், சமூக ஆர்வலர், அருப்புக்கோட்டை.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X