| விருதுநகரில் வீடு புகுந்து கொள்ளை; 10 மாதங்களுக்கு பின் இருவர் கைது Dinamalar
விருதுநகரில் வீடு புகுந்து கொள்ளை; 10 மாதங்களுக்கு பின் இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
00:21

விருதுநகர்: -விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் பிடித்தனர்.



விருதுநகர் படேல் ரோட்டை சேர்ந்த சொப்னலீலா வீட்டில் கடந்த 2018 ஆகஸ்டில் பூட்டை உடைத்து உள்புகுந்த மர்ம நபர்கள் 21 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். விருதுநகர் கிழக்கு போலீசில் நிலுவையில் இருந்த இவ் வழக்கின் குற்றவாளியை கண்டறிய எஸ்.பி., ராஜராஜன் உத்தரவுபடி, ஏ.எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் எஸ்.ஐ., அன்புதாசன், போலீசார் சரவணன், ராஜா முத்துகிருஷ்ணன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. சிசிடிவி, கேமரா மற்றும் 'டவர் டம்பில்' பதிவான அலைபேசி எண்களின் மூலமாக நிக்சன் கைது செய்யப்பட்டார். அவரது தகவல்படி முக்கிய குற்றவாளியான முருகன் சேலத்தில் கைது செய்யப்பட்டார். தொடர் விசாரணையில் மெட்ராஸ் முருகன், காளிதாஸ் உடன் சேர்ந்து கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்கள் ராஜபாளையம், சங்கரன்கோவில், மதுரை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. 51 பவுன் நகை, அவர்கள் பயன்படுத்திய காரையும் கைப்பற்றி போலீசார் குற்றவாளிகளை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X