தென்கீரனுார் பகுதி மக்கள் தண்ணீர் கேட்டு மறியல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
00:41

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் பகுதி மக்கள் தண்ணீர் தரக்கோரி நேற்று காலை சாலை மறியல் செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் கம்பன் நகர் பகுதியில் பல நாட்களாக ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. அத்துடன் மேட்டுப்பகுதியான இங்கு போதிய அளவு தண்ணீர் வரத்து இல்லை எனக்கூறி நேற்று காலை 6:30 மணிக்கு விளம்பார் சாலையில் அப்பகுதி மக்கள் மறியல் செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தண்டபாணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் பி.டி.ஓ., ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தியதில் இப்பகுதியில் ஏற்கனவே இரண்டு புதிய போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேட்டுப்பகுதியான இங்கு தண்ணீர் தருவதற்கு போதிய ஆதாரம் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். அதற்கு எங்கள் பகுதிக்கு மட்டும் தண்ணீர் தருவதற்காக இங்குள்ள கிணற்றுப் பகுதியில் புதிய போர்வெல் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து 7:00 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X