| தமிழ்ச்சங்க இலக்கிய தொடர் சொற்பொழிவு Dinamalar
தமிழ்ச்சங்க இலக்கிய தொடர் சொற்பொழிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
00:48

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் கல்லை தமிழ்ச் சங்கத்தின் தமிழ் இலக்கிய தொடர் சொற்பொழிவு கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி எஸ்.எம்.டவர் கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கல்லை தமிழ்ச் சங்கத் தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் கோமுகி மணியன், கவிஞர் கோமுகி தாசன், கவிமாமணி முத்தமிழ் முத்தன் முன்னிலை வகித்தனர். சங்க செயலர் மதிவாணன் வரவேற்றார்.கவிஞர்கள் அறிவழகன், ஆராவமுதன், பிச்சப்பிள்ளை ஆகியோர் இலக்கிய சொற்பொழிவாற்றினர். கள்ளக்குறிச்சி மனவளக்கலை மன்ற அறிவுத்திருக்கோவில் தலைவர் கோவிந்தசாமியின் 95வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, புலவர்கள் நாராயணசாமி, சின்ராசு, கோவிந்தராசு, நல்லாப்பிள்ளை, செம்பியன், சிவசூரியன், வெங்கட்ராமன், அம்பேத்கர், ஜெயராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்க செய்தியாளர் கலைமகள் காயத்ரி நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X