கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே பஸ்சில் வாலிபரிடம் பிக்பாக்கெட் அடித்த நபர் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.கள்ளக்குறிச்சி பெருமங்கலம் காலனியைச் சேர்ந்த அய்யாசாமி மகன் கதிரவன், 28; இவர் அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் கள்ளக்குறிச்சி செல்ல பஸ் ஏறினார்.அப்போது கதிரவன் பாக்கெட்டிலிருந்த 500 ரூபாயை பிக்பாக்கெட் அடித்துவிட்டு அங்கிருந்து ஒரு நபர் தப்பியோடினார். உடன், அங்கிருந்தவர்களின் உதவியுடன் அந்த நபரை பிடித்து வரஞ்சரம் போலீசில் ஒப்படைத்தார்.போலீஸ் விசாரணையில் பெருமங்கலம் காலனியைச் சேர்ந்த மூப்பர் மகன் அஜித்குமார், 20; என தெரியவந்தது. உடன், போலீசார் அந்த நபரைகைது செய்தனர்.