| அரசு பள்ளி ஆசிரியர்கள் தாமத வருகை இல்லை Dinamalar
அரசு பள்ளி ஆசிரியர்கள் தாமத வருகை இல்லை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
01:00

திருப்பூர்:'பயோ மெட்ரிக் முறையால், ஆசிரியர்கள் தாமத வருகை தொடர்பான புகார்கள் வருவதில்லை,' என்று, கல்வி அலுவலர்கள் கூறினர்.தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள், கடந்த 3ம் தேதி முதல், பயோமெட்ரிக் முறை மூலம் தங்கள் வருகையைப் பதிவு செய்து வருகின்றனர். முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், வட்டார மையக் கல்வி அலுவலக ஊழியர்களுக்கும், இந்த முறை அமலாகியுள்ளது.கல்வி அதிகாரிகள் கூறியதாவது: ஆசிரியர்களின் காலதாமத வருகை தொடர்பாக, முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு, பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அதிகளவில், புகார்கள் வரும். இதைக் கண்டறிய, பள்ளிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஒருநாள் ஆய்வில், பள்ளிக் குறைபாடுகள் மற்றும் தாமதமாக வரும் ஆசிரியர்களைக் கண்டறிவது சிரமம்.பயோ மெட்ரிக் முறை அமலால், ஆப்சென்ட் ஆகிவிடும் என்பதால், தாமத வருகையை, தற்போது ஆசிரியர்கள் முழுமையாகத் தவிர்த்து விடுகின்றனர். இதுதொடர்பான புகார்கள், இப்போது இல்லை. ஆசிரியர்கள், சரியான நேரத்துக்கு, பள்ளிக்கு வருவது மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஐந்து நிமிடம் சலுகை: தங்கள் வருகையைப் பதிவு செய்ய, காலை 9:30 மணி என்றிருந்ததை காலை 9:35க்குள்ளும், மாலை 4:30க்குள் என்றிருந்ததை 4:35க்குள்ளும் என ஆசிரியர்களுக்கு, ஐந்து நிமிடம் கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.கல்வி அலுவலக ஊழியர்களுக்கும் இதேபோன்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X