பீளமேட்டில் பன்மால் ரோட்டில் பள்ளம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
01:28

யமுனா வீதியில் தொட்டி 'புல்'இடையர்பாளையம், தேவாங்க நகர், ஏழாவது வார்டு, யமுனா வீதியில் தொட்டிகள் நிரம்பி சாலையில், குப்பை குவிந்திருக்கிறது.- சிவக்குமார், இடையர்பாளையம்.

சிங்காநல்லுாரில் சேதமடைந்த ரோடுசிங்காநல்லுார், ஹவுசிங்யூனிட் செல்லும் வழியில் சாலை குண்டும், குழியுமாக மோசமாக சேதமடைந்துள்ளது.- மணிகண்டன், சிங்காநல்லுார்.

மின்கம்பம் சேதம்துடியலுார், மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் மோசமாக சேதமடைந்துள்ள மின்கம்பத்தை, அகற்ற நடவடிக்கை வேண்டும்.- ஆகல்யா, துடியலுார்.

இடிந்த வடிகால்மதுக்கரை - சுந்தராபுரம் மெயின் ரோடு, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் இடிந்துள்ள வடிகாலால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.- சண்முகசுந்தரம், மதுக்கரை.

தெருவிளக்குகள் பழுதுபீளமேடு, ஸ்ரீராம் நகர் மணி தியேட்டர் அருகில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை.- குருநாதன், பீளமேடு.

கணபதியில் சுகாதாரக்கேடுகணபதி, போலீஸ் குவாட்டர்ஸ் குடியிருப்பு பகுதி அருகே சாலையெங்கும் பரவிக்கிடக்கும் குப்பையால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- சந்திரசேகரன், கணபதி.

சூர்யா கார்டனில் சாலையில் கழிவுகள்பீளமேடு, பாரதி காலனி, சூர்யா கார்டன் முன்புறம், சாலையை மறித்து கொட்டப்பட்டுள்ள மரக்கழிவுகளை அகற்ற வேண்டும்.- உதயகுமார், சூரியா கார்டன்.

அண்ணா நகரில் சாக்கடை சாலைவேலாண்டிபாளையம், 14வது வார்டு, அண்ணா நகர் ரேஷன் கடை முன்பு சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடுகிறது.- சுப்பிரமணி, வேலாண்டிபாளையம்.

போக்குவரத்து நெருக்கடிரத்தினபுரி, போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.- மாதவி,

ரத்தினபுரி.

பாரதிகாலனியில் குப்பை மலைபீளமேடு, பாரதிகாலனி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுரேஷ்,

பீளமேடு.

பன்மால் ரோட்டில் பள்ளம்பீளமேடு, பன்மால் ரோடு, விகாஸ் லேஅவுட் சாலை நடுவே உள்ள குழியை சரிசெய்ய வேண்டும்.- அழகர்சாமி,

பீளமேடு.

கார்த்திக் நகரில் ஒளியில்லைசரவணம்பட்டி, 28வது வார்டு, கார்த்திக் நகர் பகுதியில் கடந்த, 20 நாட்களுக்கு மேலாக தெருவிளக்குகள் எரியவில்லை.- வெங்கட், சரவணம்பட்டி.

நடைபாதை எங்கே?லாலிரோடு, வேளாண் பல்கலை அருகில் செயல்படும் கடைகள், நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை அடுக்கி வைத்துள்ளன.- பிரதீப்,

பி.என்.புதுார்.

சம்பத் வீதியில் சாலை ஆக்கிரமிப்புரத்தினபுரி, சம்பத் வீதியில் சாலையின் இருபுறங்களிலும், வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பள்ளி வாகனங்கள் செல்ல முடியவில்லை.- குரு, சம்பத் வீதி.

வேகத்தடை வேண்டும்சிங்காநல்லுார், 59வது வார்டு வசந்தா மில் ரோட்டில் புதிய தார்சாலை போடப்பட்டுள்ள பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.- ராஜேந்திரன், சிங்காநல்லுார்.

அதிகாரிகள் அலட்சியம்திருச்சி ரோடு, ஒண்டிப்புதுாரில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடை அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்பெட்டி குறித்து, புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை.- செந்தில்ராஜன், ஒண்டிப்புதுார்.

காந்திஜி காலனியில் கால்வாய் அடைப்புமதுக்கரை ரோடு, காந்திஜி காலனியில் கழிவுநீர் சாக்கடைகள் சரியாக துார்வாரவில்லை. கால்வாய்களில் மண் நிரம்பியுள்ளது.- சிவக்குமார், ஸ்ரீ கோபாலபுரம்.

கோர்ட்டில் நுழைய தடைகோவை நீதிமன்ற வளாகத்தின் நுழைவுவாயில் முன் வைக்கப்பட்டுள்ள பேனர், போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ளது.- மாணிக்கராஜ், மாச்சாம்பாளையம்.

போத்தனுாரில் குப்பை தேக்கம்போத்தனுார் மேட்டூர், 100வது வார்டு, பழனியப்பா கவுண்டர் வீதியில் பல வாரங்களாக குப்பை அகற்றப்படுவதில்லை.- சரவணன், போத்தனுார்.

துார்வாராததால் துர்நாற்றம்மலுமிச்சம்பட்டி, அண்ணா நகர் பகுதியில் சாக்கடை வடிகாலை துார்வாராததால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.- சுஜாதா, மலுமிச்சம்பட்டி

கழிவுகள் தேக்கம்தாளியூர் பேரூராட்சி, ஆர்.ஆர்.அபார்ட்மென்ட் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள மரக்கழிவுகளை அகற்ற வேண்டும்.- சண்முகவேல், கே.என்.பாளையம்.

அரிசிபாளையத்தில் சாலை வசதியில்லைஅரிசிபாளையம், கிரீன்கார்டன் பேஸ் 2 குடியிருப்பு பகுதிக்கு தார்சாலை வசதி அமைத்து தர வேண்டும்.- அப்பாஸ், அரிசிபாளையம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X