குடிநீர் கேன் சுத்தமா இருக்கா? ஆய்வுக்கு தயாராகின்றனர் அதிகாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
01:31

கோவை:குடிநீர் கேன்களின் விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்ய, உணவு பாதுகாப்பு துறை தயாராகி வருகிறது.கோவை மாவட்டத்தில், 72 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குடிநீர் கேன்களை சுத்தமாக பராமரிக்கவும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றவும், குடிநீர் கேன்களை சூரிய ஒளி படாத வகையில் பராமரிக்கவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குடிநீர் கேன்களை வினியோகம் செய்ய எடுத்துச் செல்லும் போது, அவற்றை வெய்யில் படாத வகையில் எடுத்துச் செல்ல வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பெரும்பாலான குடிநீர் வினியோகம் செய்வோர், அதை பின்பற்றுவதில்லை.


இதையடுத்து குடிநீர் கேன்களின் தரம், அவற்றை வினியோகம் செய்யும் முறைகள் குறித்து ஆய்வு நடத்த, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்துறை உணவுப்பிரிவு நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில், ''குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களின் உரிமையாளர்களை அழைத்து, ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர் கேன்களின் பாதுகாப்பு மற்றும் வினியோக முறைகள் குறித்து, மீண்டும் ஒரு முறை எடுத்துக்கூற உள்ளோம். அதன் பின் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். விதிகளை மீறும்பட்சத்தில் நடவடிக்கை இருக்கும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X