| வாசகர் ' வாய்ஸ்' Dinamalar
வாசகர் ' வாய்ஸ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
01:32

பாலத்தில் பாதுகாப்பில்லை


கோவை மாநகராட்சி, 75வது டிவிசன், நஞ்சுண்டாபுரம் பிரதான சாலையில் உள்ள மேம்பாலம் குறுகலாக உள்ளது. இதனால், நெருக்கடி சமயங்களில் வானங்கள் ஒன்றை ஒன்று, முந்தும்போது விபத்து ஏற்படுகிறது. வளைவான பகுதியில் விபத்துகளில் சிக்குவோர், கீழே துாக்கி வீசப்படுவதால், உயிரிழப்பு நிகழ்கிறது. பாலத்தின் பக்கவாட்டு சுவர்களை உயர்த்தி, விபத்துகளை தடுக்க வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வு பெற, பாலம் அருகே போக்குவரத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.- வேல்முருகன், நஞ்சுண்டாபுரம்.

குப்பை தேக்கம்


கோணவாய்க்கால்பாளையம், ஒன்றாவது வார்டு, கிருஷ்ணாராயபுரம் தோட்டம் சாலையில், கோவை கார்டன் குடியிருப்பு உள்ளது. இங்கு, குப்பை சேகரிக்கும் வண்டிகள் வருவதில்லை. தொட்டி வைத்தும் பலனில்லை. தொட்டி நிரம்பி இரண்டு வாரங்கள் ஆகியும், இதுவரை குப்பை அகற்றப்படவில்லை. குறிப்பிட்ட இடைவெளியில், குப்பையை சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கார்த்திக், கோவை கார்டன்.

பிளாஸ்டிக் மயம்


சுற்றுப்புற சூழல் பாதுகாப்புக்காக, பிளாஸ்டிக்கை தடை செய்தது வரவேற்கதக்கது. அதேபோல், கழிவுகளாக சாக்கடையில், சாலைகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக்கையும் அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். சரவணம்பட்டி, 28வது வார்டு, ஸ்ரீ நேரு நகரில் சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு அடைத்து இருப்பதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பல வாரங்களாக அகற்றப்படாத, பிளாஸ்டிக் குப்பை சாலையெங்கும் பரவிக்கிடக்கிறது.- ஸ்ரீ நேரு நகர் பொதுமக்கள்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X