சண்முகா நதியை சீரமைக்க காவடியுடன் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
04:28

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஆறு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் சண்முகா நதி உருவாகிறது. இந்த ஆறு வடக்கு நோக்கி மானுார், அக்கரைப்பட்டி, கீரனுார், அலங்கியம் ஆகிய கிராமங்களின் வழியே ஓடி அலங்கியத்திற்கும், தாராபுரத்திற்கும் இடையே காவிரியின் துணை ஆறான அமராவதி ஆற்றோடு கலக்கிறது.புனிதமிக்க சண்முக நதியில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து மாசடைந்துள்ளது. மாசடைந்த தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடுவதால் தொற்று நோய் அபாயம் உள்ளது. எனவே, இந்த நதியை சீரமைக்க கோரி இந்து தமிழர் கட்சியினர் காவடி ஏந்தி திண்டுக்கல் கலெக்டர் வினயிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மாநில குழு உறுப்பினர் மனோஜ்குமார் கூறும்போது, ''தைப்பூசம், பங்குனி உத்திரத்தின்போது பழனி ஆண்டவர் முத்துக்குமாரசுவாமி தீர்த்தவாரி உற்சவம் இந்த சண்முகநதியில்தான் நடைபெறும். தற்போது அது நடைபெறுவதில்லை. அதை மீண்டும் நடத்துவதற்கு ஏற்ப நீர்நிலையை துாய்மைப்படுத்த வேண்டும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X