வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு புதியதலைமுறை ரோட்டரி சங்க தலைவராக கிருஷ்ணமூர்த்தி, செயலாளராக மாதவராஜன், பொருளாளராக ஜெயராமன் பதவியேற்றனர்.
துணைத் தலைவராக சிதம்பரம், இணைச் செயலாளர்களாக முருகபாண்டியன், தனராஜ் அலெக்சாண்டர் பதவியேற்றனர். விழாவிற்கு மாவட்ட கவர்னர் ஒளிவண்ணன் தலைமை வகித்தார். கவர்னர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முகம்மது நிஜாமுதீன், முன்னாள் தலைவர் நாகராஜன் வரவேற்றனர். துணை கவர்னர் ஜீவானந்தன், முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.நீர்நிலைகளை துார் வாருதலே இந்த ஆண்டின் முக்கிய நோக்கம் என புதிய நிர்வாகிகள் கூறினர். பர்ஸ்ட் ஸ்டெப் பள்ளி சார்பில் துணிப் பைகள் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் கயல்விழி, முதல்வர் ரியா தொகுத்து வழங்கினர். செயலாளர் மாதவன் நன்றி கூறினார்.