பழநி : போலீசாரை கண்டித்து, பழநியில் வழக்கறிஞர்கள் ரோடு மறியல், ஆர்ப்பாட்டம் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திண்டுக்கல்லில் வழக்கறிஞர் தியாகு என்பவரை போலீசார் தாக்கியதை கண்டித்து, பழநி நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் ரோடு மறியல் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். வழக்கறிஞரை தாக்கிய திண்டுக்கல் இன்ஸ்பெக்டரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களுடன் பழநி டி.எஸ்.பி., விவேகானந்தன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக -திண்டுக்கல் ரோட்டில் 20நிமிடம் போக்குவரத்து பாதித்தது.--