| வக்கீல்கள் 3 நாள் கோர்ட் புறக்கணிப்பு; காத்திருப்போர் பட்டியலில் இன்ஸ்பெக்டர் Dinamalar
வக்கீல்கள் 3 நாள் கோர்ட் புறக்கணிப்பு; காத்திருப்போர் பட்டியலில் இன்ஸ்பெக்டர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
04:44

திண்டுக்கல் : வழக்கறிஞரை தாக்கிய பெண் இன்ஸ்பெக்டரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், என வலியுறுத்தி திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் நேற்று முதல் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.



திண்டுக்கல் மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வசந்தி. நேற்று முன்தினம் ஒரு காதல் ஜோடி ஸ்டேஷனில் தஞ்சமடைந்தது. அவர்களிடம் வசந்தி விசாரணை நடத்தினார். ஒரு தரப்புக்கு ஆதரவாக திண்டுக்கல் வழக்கறிஞர் தியாகு பேசியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை, ஒருவர் தாக்கியதில்,. இருவருக்கும் காயம் ஏற்பட்டது.இருவரின் புகாரின் பேரில் வழக்கறிஞர் தியாகு, இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் 3 போலீசார் மீது வடக்கு இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்கு பதிந்தார்.இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று முன்தினம் திண்டுக்கல் வழக்கறிஞர்கள் ஸ்டேஷனை நள்ளிரவு 2:00 மணி வரை முற்றுகையிட்டனர். முடிவில், இன்ஸ்பெக்டர் வசந்தி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.இன்ஸ்பெக்டரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய கோரி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் நேற்று முதல் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் கிருஷ்ணன் கூறியதாவது: வழக்கறிஞர் தியாகுவை தாக்கிய இன்ஸ்பெக்டரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய கோரி எஸ்.பி.,யிடம் மனு கொடுத்துள்ளோம். அவர் வீடியோ பதிவை ஆய்வு செய்து 3 நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அதுவரை கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுவோம். நடவடிக்கை இல்லையெனில், வருகிற வியாழக்கிழமை அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுப்போம், என்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X