| திண்டுக்கல்லில் கணினி ஆசிரியர் தேர்வர்கள்; தேர்வு மையம், ஏற்பாடு பற்றி தெரியாததால் பதற்றம் Dinamalar
திண்டுக்கல்லில் கணினி ஆசிரியர் தேர்வர்கள்; தேர்வு மையம், ஏற்பாடு பற்றி தெரியாததால் பதற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
04:45

திண்டுக்கல் : ஜூன் 23 ல் கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடக்கும் இடம் குறித்து இன்னும் அறிவிப்பு வெளியிடாததால் தேர்வர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.



தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதில் பங்கேற்க ஏப்.20 வரை பலரும் இணையதளத்தில் விண்ணப்பித்தனர். இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டது.



கணினி பயிற்றுனர் நிலை - 1 க்கான (முதுநிலை) கணினி வழித்தேர்வு ஜூன் 23 ல் காலை 10:00 முதல் பகல் 1:00 மணி வரை நடக்க உள்ளது. தேர்வர்கள் www.trb.tn.nic.in ல் பயனீட்டாளர் பெயர், கடவுச் சொல்லை கொடுத்து நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.தேர்வின் போது புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். தேர்வு மையத்திற்குள் காலை 8:30 க்குள் இருக்க வேண்டும்.



அரசு பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்கள், இளநிலை கணினி அறிவியல் படிப்புடன் பி.எட்., முடித்தவர்களும், தேசிய கல்வியியல் கவுன்சிலிங் விதிகளின் படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கானகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்புடன் பி.எட்., முடித்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.



தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளநிலையில் தேர்வு மையம், தேர்வு எழுத இருப்போரின் விவரங்கள் அந்தந்த மாவட்ட கல்வித்துறை அலுவலகர்களுக்கு நேற்று மாலை வரை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவிக்கவில்லை. தேர்வு மையமும் எதுவென தெரியாமல் தேர்வர்களும், தேர்வு எழுதுவோரின் விவரம் தெரியாமல்கல்வித்துறை அதிகாரிகளும்குழப்பத்தில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X