| அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் மர்ம நபர்களுக்கு வலை Dinamalar
அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் மர்ம நபர்களுக்கு வலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
04:47

வேடசந்துார் : பாரில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



வேடசந்துார் அருகே கிழக்கு மாத்தினிபட்டியை சேர்ந்தவர் கார்த்திக் 27. அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைசெயலாளர். இவர், 4 நாட்களுக்கு முன் பூத்தாம்பட்டி டாஸ்மாக் பாரில் இருந்தபோது, அருப்பம்பட்டியை சேர்ந்த சிலர் அங்கு சென்றுள்ளனர். அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டு, பின் கைகலப்பில் முடிந்துள்ளது. மறுநாள் காலை மாத்தினிபட்டி கார்த்தி, வேடசந்துார் ஆத்துமேட்டில் நின்றிருந்தபோது, பிரச்னைக்குரிய 3 பேர் அவரை கத்தியால் தொடை, கையில் வெட்டிவிட்டு தப்பினர். சிகிச்சையில் இருந்த கார்த்தி நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பினார்.நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் யாரோ பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வீசிவிட்டு சென்றதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., சிவகுமார் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு ஒரு போலீசாரை பாதுகாப்பு பணியில் நிறுத்தியுள்ளார்.டி.எஸ்.பி., கூறுகையில், ''பெட்ரோல் குண்டு வீசியுள்ளதாக தகவல் வந்தது. சென்று பார்த்தபோது பெட்ரோலுடன் வீசப்பட்ட பாட்டில் ஒன்று உடைந்து கிடந்தது. யார் வீசியது என விசாரித்து வருகிறோம். ஏற்கனவே இவரை வெட்டிய குற்றவாளிகள் கேரளாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அவர்களை பிடித்து விடுவோம்'' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X