விவசாயிகளுக்கு நிதி உதவி விண்ணப்பிக்க அழைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
01:06

உடுமலை : மத்திய அரசின் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் 'பி.எம்., கிஷான் சம்மான்' திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பாரதப்பிரதமரின், 'பி.எம்.,கிஷான் சம்மான் திட்டம், கடந்த பிப்., முதல் செயல்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் இத்திட்டம், முதற்கட்டமாக இரண்டு எக்டர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்டது.



இத்திட்டத்தில், உடுமலை தாலுகாவில், 10 ஆயிரத்து 500 விவசாயிகள் சேர்க்கப்பட்டு, முதல் கட்டத்தொகை, 2 ஆயிரம் ரூபாய் விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டம் தற்போது, சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகள் என அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள், உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்களை தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேரலாம்.



இத்திட்டத்தில் சேர, வி.ஏ.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பங்கள் அளிக்கலாம். வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இத்திட்டத்தில் சேரலாம்.இதுவரை நிலமானது இறந்த தனது தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசுதாரர், தாலுகா அலுவலகம் மூலம், வரும், 30க்குள் பட்டா மாறுதல் செய்து விண்ணப்பிக்கலாம்.ஜூலை 15க்குள் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு இந்தாண்டுக்கான, முதல் தவணை தொகை கிடைக்கும். எனவே, அனைத்து விவசாயிகளும், ஆதார் அட்டை, வங்கி கணக்கு பாஸ் புத்தக நகல், பட்டா, சிட்டா, மொபைல் எண் ஆகியவற்றுடன் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X