உடுமலை : உடுமலையில், ரோடு மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், தஞ்சாவூரில், கோவில் கட்ட அனுமதி கோரி போராட்டம் நடத்த சென்று போது, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அதனைக்கண்டித்து, உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, இந்து முன்னணி, தெற்கு மாவட்ட செயலாளர் வீரப்பன் தலைமையில், ரோடு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட, 28 பேரை போலீசார் கைது செய்தனர்.