| 20 நாட்களாக குடிநீர் வரவில்லை துங்காவியில் சாலை மறியல் 20 நாட்களாக குடிநீர் வரவில்லை மடத்துக்குளம் அருகே சாலை மறியல் Dinamalar
20 நாட்களாக குடிநீர் வரவில்லை துங்காவியில் சாலை மறியல் 20 நாட்களாக குடிநீர் வரவில்லை மடத்துக்குளம் அருகே சாலை மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
01:12

மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே, குடிநீர் பிரச்னைக்காக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.மடத்துக்குளம் ஒன்றியம் துங்காவி ஊராட்சியில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இங்கு கடந்த பல நாட்களாக போதிய குடிநீர் வினியோகம் இல்லை.இந்த பிரச்னை குறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாக அலுவலர்களுக்கு மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.



இந்நிலையில், நேற்று இரவு, 7:00 மணிக்கு உடுமலை - தாராபுரம் ரோட்டிலுள்ள துங்காவி பஸ் நிறுத்தத்தில், நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது.இது குறித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் மிகவும் சிரமப்படுகிறோம். ஒரு குடம் நீருக்காக அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்லும் அவலம் உள்ளது. பல முறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.



போதிய குடிநீர் வினியோகிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்' என்றனர்.போராட்டம் நீடித்த நிலையில், கணியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X