இதற்கும் தினக்கூலியா? அவலம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
01:21

மேட்டுப்பாளையம் : புகழ்பெற்ற, பழமையான, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், பூஜை செய்ய நிரந்தரமாக ஒரு பூசாரி கூட இல்லை. தற்காலிக ஏற்பாடாக, தினக்கூலி அடிப்படையில் மூன்று பூசாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், விடுமுறை மற்றும் அமாவாசை, செவ்வாய்க்கிழமை நாட்களில், பல ஆயிரம் பக்தர்களும் தரிசிக்கின்றனர். கோவில் வளாகத்தில் விநாயகர், நாகர், கருப்பராயன், பகாசூரன், பீமன் சன்னதிகள் உள்ளன.



ஒவ்வொரு சன்னதிக்கும் இரு பூசாரிகள், வாகன பூஜை செய்ய இரு பூசாரிகள், கோவிலுக்குள் பூஜை செய்ய நான்கு பூசாரிகள் என மொத்தம், 14 பூசாரிகள் தேவை. கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டிருந்தாலும், பூசாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் நியமிக்கும் அதிகாரம், பரம்பரை அறங்காவலருக்கே உள்ளது. பணியில் இருந்த பூசாரிகள் பலர் ஓய்வு பெற்று விட்டனர்; பலர் இறந்து விட்டனர்.



தற்போது, ஒரு பூசாரி கூட இல்லை.உண்டியல் காணிக்கை மற்றும் கடை ஏலம் விடுவதன் மூலம், ஆண்டுக்கு, ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இவ்வளவு வருவாய் கிடைத்தும் கூட, நிரந்தர பூசாரிகள் நியமிக்கப்படவில்லை. சுவாமிக்கு அர்ச்சனை செய்வது; வாகனங்களுக்கு பூஜை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. பக்தர்கள், தாங்களாகவே கற்பூரம் ஏற்றி, தரிசித்துச் செல்கின்றனர். அடுத்த மாதம், இக்கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா நடைபெற உள்ளது; ஏராளமான பக்தர்கள் வருவர். அதற்குள் பூசாரி நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவில் உதவி கமிஷனர் ராமு கூறுகையில், ''ஆகமப்படிப்பு படித்து, சான்று பெற்ற, 11 பூசாரிகள் நியமிக்க, பரம்பரை அறங்காவலருக்கு உத்தரவிடப்பட்டது.



'இந்த உத்தரவு பரம்பரை அறங்காவலரின் அதிகாரத்தை பறிப்பதாக இருக்கிறது' என, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மூலவர் சன்னதியில் பூஜை செய்ய, தினக்கூலி அடிப்படையில், தற்காலிகமாக மூன்று பூசாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவையான பூசாரிகள் நியமிக்க, பரம்பரை அறங்காவலரே முடிவெடுக்க வேண்டும்,'' என்றார்.பரம்பரை அறங்காவலர் வசந்தாவிடம் கேட்டபோது, ''ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு தற்காலிகமாக பூசாரிகள் நியமிக்க அனுமதி கோரி, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் பூசாரிகள் நியமிக்கப்படுவர்,' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X