| குளத்து கழிவு நீரில் ஆக்சிஜன் காலி மீன்களின் உயிருக்கு இல்லை வேலி Dinamalar
குளத்து கழிவு நீரில் ஆக்சிஜன் காலி மீன்களின் உயிருக்கு இல்லை வேலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
01:51

கோவை : கோவை செல்வசிந்தாமணி குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால், சுற்று வட்டாரப்பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசுகிறது.கோவை மாநகரில், செல்வபுரத்தில் அமைந்துள்ள செல்வ சிந்தாமணி குளம், 37 ஏக்கர் பரப்பு கொண்டது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதி, 1.69 சதுர கிலோமீட்டர். குளத்தில், அதிகபட்சமாக, 2.28 மீட்டர் உயரத்துக்கு, தண்ணீர் தேக்க முடியும்.பருவமழை காலங்களில், நொய்யல் ஆற்றில் இருந்து செல்வசிந்தாமணி குளத்துக்கு தண்ணீர் வருகிறது.



சுற்று வட்டார பகுதி சாக்கடை கழிவு நீரும், இந்த குளத்தில் கலக்கிறது. கடந்தாண்டு மழைக்காலத்துக்கு பிறகு, குளத்துக்கு தண்ணீர் வரத்து இல்லை. குளத்து நீர், முற்றிலும் கழிவு நீராக மாறி விட்டதாக, சுற்று வட்டார பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.இதற்கிடையே, கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், இந்த குளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. கட்டுமானப் பணி நடப்பதற்கு வசதியாக, குளத்துக்குள் தண்ணீர் வராமல் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில், குளத்தில் சில நாட்களாக மீன்கள் செத்து மிதக்கின்றன. லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குளத்து நீரின் பெரும்பகுதி வற்றி, கழிவு நீர் மட்டுமே மிஞ்சியிருக்கும் நிலையில், ஆக்சிஜன் குறைந்துள்ளதே மீன்கள் இறக்க காரணம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X