அங்கன்வாடிகளில் 1,182 எல்.கே.ஜி., 'சீட்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
01:52

கோவை, : கோவை மாவட்டத்தில், 122 அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், 1,182 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி., வகுப்புகளை தொடங்க உத்தரவிடப்பட்டது.அதன்படி, 32 மாவட்டங்களிலும், 2,381 அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.



கோவை மாவட்டத்தில், 1,697 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இதில், பள்ளிகளில் செயல்படும், 122 அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி., வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.இதில், 588 மாணவர்கள்; 594 மாணவியர் என, 1,182 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். எல்.கே.ஜி., வகுப்பில், 3 முதல் 4 வயதான குழந்தைகளும், யு.கே.ஜி., வகுப்பில், 4 முதல் 5 வயதான குழந்தைகளும் சேர்க்கப்படுகின்றனர்.



இந்த வகுப்புகளில், ஆங்கிலக்கல்வி கற்பிக்க, தகுதி வாய்ந்த சிறப்பாசிரியர்களை, தமிழக அரசு நியமித்துள்ளது. 'எல்.கே.ஜி., சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு, சீருடைகள், புத்தகப்பை, காலணிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன' என்று, கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X