கோவை, : அரசு துறை அலுவலகங்களுக்கு தகவல் கோரி வரும் மனுக்களுக்கு உரிய பதிலை குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்பது விதி. அதன்படி, தகவல் தெரிவிக்காத அரசு துறையினர் மீது, மனுதாரர்கள், மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம்.கோவை மாநகராட்சியில் தகவல் கிடைக்காத மனுதாரர்கள் 7 பேர், மாநில ஆணையத்துக்கு மேல் முறையீடு செய்திருந்தனர்.அந்த மனுக்களின் மீதான விசாரணை கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாநில ஆணையர் முருகன், தொடர்புடைய அதிகாரிகள், மனுதாரர்களிடம் விசாரணை நடத்தினார்.