விட்டால் நடுரோட்டில் கடை விரிப்பார்கள் போல!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
02:01

கோவை : கோவை - பொள்ளாச்சி ரோட்டில், குறிச்சி குளத்தின் இடதுபுறம் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், வேடிக்கை பார்க்கின்றனர்.கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது; தேவைப்படும் இடங்களில், உயர்மட்ட பாலங்கள் கட்டப்படுகின்றன. ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அகற்றி, 51 அடிக்கு ரோட்டை விஸ்தரிப்பு செய்திருக்க வேண்டும். ஈச்சனாரியில் இருந்து பொள்ளாச்சி செல்லும் ரோடு, போதுமான அளவு அகலமாக இருக்கிறது.குறிச்சி மட்டும் குறுகுகிறது.



ஆனால், குறிச்சி பிரிவு முதல் ஈச்சனாரி வரை, ரோடு குறுகலாக இருக்கிறது. அதிலும், ஆத்துப்பாலத்தை கடந்து, குறிச்சி குளம் துவக்கம் முதல் பொங்காளியம்மன் கோவில் வரை, 30 அடி அகலமே ரோடு இருக்கிறது.சாலையின் இடதுபுறம் இரும்பு, ரப்பர் பொருட்கள், இயந்திரங்கள் விற்போர், மார்பிள், டைல்ஸ், பேக்கரி, மர சாமான்கள் என பலவித பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உருவெடுத்துள்ளன.



நெடுஞ்சாலைத்துறை வேடிக்கைரோட்டோரத்தில் பொருட்களை பரப்பி, கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்திருக்கின்றனர். ரோட்டிலேயே தார்பாலின்களை சுருட்டி, விரிக்கின்றனர். இதனால் இவ்வழித்தடத்தில் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.ரோட்டை அளந்து, கான்கிரீட் தடுப்பு கட்டி, எல்லை கற்கள் நட்டு, ஆக்கிரமிப்பு உருவாகாமல் இரும்பு தடுப்பு அமைத்திருக்க வேண்டும்.அதை செய்யாமல், ஆக்கிரமிப்புகள் உருவாக விட்டு விட்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.குளக்கரை என்றாலே இளக்காரம்அதேபோல், குளத்தின் இறக்கத்தில், குறிச்சி பிரிவுக்கு எதிரே இருந்து ஆத்துப்பாலம் வரை, இடது புறம் ரோட்டோரத்தை ஆக்கிரமித்து, பழைய மரப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் நடத்தப்படுகின்றன.இப்பகுதியில், இரு மாதத்துக்கு முன், ஒரு முதியவர் விபத்தில் உயிரிழந்தார்.



அதன் பின்பும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 'ஒரு பலிதானே...பெரிய அளவில் விபத்து நடந்தால் பார்த்துக் கொள்ளலாம்; அதுவரை கஜானாவை நிரப்புவோம்' என்றிருக்கிறார்கள் போலிருக்கிறது.இது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, 'உக்கடம் - ஆத்துப்பாலம் வரையிலான மேம்பால பணிக்காக, ஆத்துப்பாலம் பகுதியில், 500 மீட்டர் துாரத்துக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. அப்போது, குறிச்சி குளக்கரை பகுதியிலும் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும்' என்றனர்.



இதற்கு ஏன் நல்ல நாள்? ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நல்ல நாள் பார்க்கிறார்கள். கரும்புக்கடையில் இருந்து ஆத்துப்பாலம் வரை பாலம் நீட்டிக்க, இப்போது தான் 'டிசைன்' தயாரித்திருக்கிறார்கள்.இனி, அரசிடம் ஒப்புதல் பெற்று, நிதி ஒதுக்கி, வேலை செய்வதற்கு, ஓராண்டாகி விடும். பாலம் வேலை செய்யும்போது, ஆக்கிரமிப்பை அகற்றுவோம் என சொல்வது, கடமையை தட்டிக்கழிக்கும் செயல்.ஒவ்வொரு அதிகாரிகளும், குளுகுளு அறையில் இருந்து முதலில் வெளியே வர வேண்டும்;



மக்களின் அவதியை நேரில் பார்க்க வேண்டும். வருவார்கள்...செயல்படுவார்கள் என நம்புவோம்!இப்பகுதியில், இரு மாதத்துக்கு முன், ஒரு முதியவர் விபத்தில் உயிரிழந்தார். அதன் பின்பும், நடவடிக்கை எடுக்கவில்லை. 'ஒரு பலிதானே...பெரிய அளவில் விபத்து நடந்தால் பார்த்துக் கொள்ளலாம்; அதுவரை கஜானாவை நிரப்புவோம்' என்றிருக்கிறார்கள் போலிருக்கிறது.இவர்களே பொறுப்பு!ராஜாமணி, கலெக்டர் - 94441 68000சுமித்சரண், போலீஸ் கமிஷனர் - 98403 15008பெருமாள், துணை கமிஷனர் (போக்குவரத்து) - 94434 81933செல்வக்குமார், கோட்ட பொறியாளர், தேசிய நெடுஞ்சாலைத்துறை - 94421 03952

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
20-ஜூன்-201916:49:37 IST Report Abuse
Ram கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியின் இரண்டு பக்கமும் துணிக்கடை. இது யாருக்கும் தெரியாதா? மாநகராட்சிக்கு அப்படி ஒரு பஞ்சமா? காய்கறி, பழம், பூ, மீன் மார்கெட், பழைய இரும்பு கடை, லாரி பேட்டைக்கு நல்ல வசதியான இடத்தை வாரி வழங்கிவிட்டு, குளம், குட்டையை மூடி பேருந்து நிலையம் அமைப்பது காலக் கொடுமை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X