கணபதி போலீஸ் குடியிருப்பில் மின் கம்பம் ?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
02:02

ஆபத்தான மின் கம்பம்மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை, சென்ட்ரல் தியேட்டர் அருகில் உள்ள மின் கம்பம், விழாமல் இருக்க, கயிற்றால் கட்டி நிறுத்தப்பட்டுள்ளது.- அருள் முருகன், வடகோவை.

நாராயணசாமி லே-அவுட்டில் சுகாதார கேடுமாநகராட்சி, 59வது வார்டுக்குட்பட்ட, நாராயணசாமி லே-அவுட் ரேஷன் கடை அருகில், சாலையோரம் குவியும் குப்பை அள்ளப்படாமல் குவிந்துள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சோமசுந்தரம், நாராயணசாமி லே-அவுட்.

கழிவுநீர் செல்ல வழியில்லைகாந்திபுரம், முதல் வீதி விரிவு, நுாறடி ரோட்டில், சாக்கடை கால்வாய் அடைப்பால், தண்ணீர் செல்ல வழியின்றி உள்ளது.-சின்னசாமி, காந்திபுரம்.

பார்க்கிங் பகுதி ஆக்கிரமிப்புகாந்திபுரம், சத்தி ரோட்டில், சாலையோர பார்க்கிங் பகுதி, தனியார் லாட்ஜ் கட்டுப்பாட்டில் உள்ளதால், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றி அவதிப்படுகின்றனர்.- சுந்தர்,

ராமநாதபுரம்.

பயிர் நடவுக்கு காத்திருக்குது ரோடுமாநகராட்சி, 32வது வார்டுக்குட்பட்ட, சேரன்மாநகர், சக்தி கார்டனில், சில நாட்களுக்கு முன் பெய்த மழையின்போது, சாலையில் தேங்கிய நீர் இன்னும் வடியாமல் உள்ளது.- சந்திரசேகர், சக்தி கார்டன்.

இறைச்சிக்கழிவால் துர்நாற்றம்சத்தி ரோடு, சங்கனுார் பிரிவு அருகில், பஸ் ஸ்டாப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில், கொட்டப்படும் இறைச்சி மற்றும் ஓட்டல் கழிவு அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. - கார்த்திக் ராஜா, கணபதி.

இருளில் தவிக்குதுசர்ச் ரோடுமாநகராட்சி, 32வது வார்டுக்குட்பட்ட, சேரன்மாநகர், சர்ச் ரோட்டில், தெரு விளக்குகள், பல மாதங்களாக எரிவதில்லை. இப்பகுதி முழுவதும் கும்மிருட்டாக காட்சியளிக்கிறது.-மதன்குமார், சேரன்மாநகர்.

குண்டும் குழியுமான சாலைஒண்டிப்புதுார், சேரன் நகர் செல்லும் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.-விக்னேஷ், ஒண்டிப்புதுார்.

குப்பையால் தொல்லைரத்தினபுரி, முத்துக்குமார் நகர் ஐந்தாவது வீதியில், சாலையோரம் அள்ளப்படாமல் குவிந்துள்ள குப்பை, காற்றில் பறந்து, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.-கிருஷ்ணா, ரத்தினபுரி.

போலீஸ் குடியிருப்பில் அவஸ்தைகணபதி போலீஸ் குடியிருப்பில், மாதக்கணக்கில், அள்ளப்படாமல் உள்ள குப்பை, மலைபோல் குவிந்துள்ளது. துர்நாற்றம் வீசுவதால், மக்கள் அவஸ்தைப்படுகின்றனர்.- கனகராஜ், பாரதி நகர்.

கருணாநிதி நகரில் சாக்கடை அடைப்புபீளமேடு பகுதி, சவுரிபாளையம், கருணாநிதி நகரில் சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் உள்ளிட்ட கழிவு பொருட்கள் சாலையில் தேங்கியுள்ளன.- மாரிமுத்து, சவுரிபாளையம்.

உயிர் பலி கேட்கும் குழிதிருச்சி ரோடு, சிங்காநல்லுார் செல்லாண்டியம்மன் நகர் மற்றும் பி.ஜி.பி.வில்லேஜ் அடுக்குமாடி குடியிருப்பு நுழைவாயிலில், திறந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை மூடியால், உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. இதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெயபால், சிங்காநல்லுார்.

நோய் தொற்று அபாயம்தாளியூர் பேரூராட்சி, ஜெ.ஜெ.நகரில் உள்ள பள்ளி, நுழைவாயில் முன், வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்த நிலையிலும், குப்பை அள்ளப்படாமல் உள்ளது.-சண்முகவேல், கலிக்கநாயக்கன்பாளையம்.

நடைபாதை ஆக்கிரமிப்புசாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோட்டில், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் முன், நடைபாதையை வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.-ராமகிருஷ்ணன், கே.கே.புதுார்.

நாய்கள் தொல்லைவிளாங்குறிச்சி ரோடு, விநாயகபுரம், குமரன் மாநகரில் தெருவிளக்குகள் இல்லாததால், இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்; தெருநாய் தொல்லையும் அதிகரித்துள்ளது.-சம்பத்குமார்,

குமரன் நகர்.

குழாய் உடைப்பு; தண்ணீர் வீண்பீளமேடு தண்ணீர் பந்தலில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கும் பகுதியில், குழாய் உடைப்பால், தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது.-சங்கர், பீளமேடு.

விளக்கு எரிவதில்லைசுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, பதிவாளர் காலனி விரிவாக்கம், குறிஞ்சி நகர் ரேஷன் கடை அருகில், நான்கு மாதங்களாக தெருவிளக்கு எரிவதில்லை. மின் வாரியத்தில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- சுரேந்தர், குறிஞ்சி நகர்.

சாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 20வது வார்டுக்குட்பட்ட, சீரநாயக்கன்பாளையம், ராதாகிருஷ்ணன் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, கொசு உற்பத்தியாகிறது. மாநகராட்சியில் பலமுறை புகார் கொடுத்தும் பலனில்லை.- வரதராஜ், சீரநாயக்கன்பாளையம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X