| தனியார் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? Dinamalar
தனியார் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
02:03

கோவை : பெண்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம், வரும் 22ல் நடக்கிறது.தனியார் துறையில் வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சிகள், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படுகின்றன.வரும் 22ம் தேதி, மகளிருக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, அனைத்து பட்டதாரிகள், தொழிற்கல்வி படித்தவர்கள், ஐ.டி.ஐ., படிப்பு படித்து சான்றிதழ் பெற்றவர்கள், டிப்ளமோ கல்வித்தகுதி உடைய அனைவரும் பங்கேற்கலாம்.



பங்கேற்கும் பெண் மனுதாரர்கள், வேலை அளிப்பவர்களுக்கு எந்தவித கட்டணமும் அளிக்க தேவையில்லை. தேர்வு செய்யப்படுவோருக்கு, பணி நியமன ஆணை அப்போதே வழங்கப்படும். வேலை பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, ரத்து செய்யப்பட மாட்டாது.மனுதாரர்கள், தொடர்ந்து தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவை, அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை புதுப்பித்து வரலாம்.வரும் 22ம் தேதி காலை 10:00 முதல் பகல் 2:00 மணி வரை நடக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில், மனுதாரர்கள் பெருமளவில் பங்கேற்று, பயன் பெறலாம் என்று, கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X