திருப்பூர் உட்பட 18 நகரங்களில் 'சாட்டிலைட்' உதவியுடன் நில சர்வே
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
02:08

திருப்பூர், : 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், சாட்டிலைட் உதவியுடன், துல்லியமாக நில அளவை செய்யும் முன்னோட்டம், திருப்பூர் உட்பட தமிழகத்தில், 18 நகரங்களில் நடந்து வருகிறது.தமிழக அரசின் வருவாய்த்துறையின் ஓர் அங்கமாக செயல்படும், நில அளவை பிரிவில், நிலம் தொடர்பான அனைத்து ஆவணங்களும், பதிவேடுகளும், பராமரிக்கப்படுகின்றன.



கரையான் அரித்துக்கொண்டிருந்த பதிவேட்டின் தகவல்கள், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது.சங்கிலி மூலம் நில அளவை செய்வது மாறி, ஜி.பி.எஸ்., உதவியுடன் செய்யும் அளவு, தொழில்நுட்பம் மேம்பட்டது. மத்தியில், பா.ஜ., அரசு அமைந்த பிறகு, நாடு முழுவதும் நில அளவைபணி அதிநவீன மாக்கப்பட்டது.சாட்டிலைட் உதவியுடன், துல்லியமாக நில அளவை செய்யும் டி.ஜி.பி.எஸ்., (வேறுபட்ட பூகோள நிலைப்படுத்துதல் அமைப்பு) தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.



கடந்த ஆண்டில் அறிமுகமான இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நாடு முழுவதும் மாதிரி நில அளவை பணி துவங்கியது. திருப்பூரில், மாதிரி அளவீட்டு பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.நில அளவை தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், ஜி.பி.எஸ்., முறைக்கும் மேம்பட்ட, டி.ஜி.பி.எஸ்., என்ற, சாட்டிலைட் உதவியுடன் நில அளவை செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. 'தற்போது திருப்பூர் உட்பட தமிழகத்தின், 18 நகரங்களில், சோதனை முறையில் சர்வே செய்யப்பட்டுள்ளது. பணி முடிந்து, டிஜிட்டல் பதிவுகள் தயாராகி வருகின்றன. இனி, 'ஆன்லைன்' மூலம், நில விவரங்களை துல்லியமாக அறிய முடியும்' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X