| கோவை மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி Dinamalar
கோவை மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
02:10

கோவை : கோவை மத்திய சிறையில் கண்ணாடி டம்ளரை உடைத்து, கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 53. இவர் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட பின், குடும்பத்தினர்யாரும் வந்து பார்க்கவில்லை.தன்னுடன் இருந்த மற்ற கைதிகளிடம், பிரகாஷ் விரக்தியுடன் தெரிவித்து வந்துள்ளார்.



இந்நிலையில் நேற்று காலை கண்ணாடி டம்ளரை உடைத்து, துாளாக்கி, தண்ணீரில் கலந்து குடித்த கைதி, உயிருக்கு போராடினார். இதனை பார்த்த சிறை அதிகாரிகள், கைதியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X