| வாலிபர் தற்கொலை முயற்சி Dinamalar
வாலிபர் தற்கொலை முயற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
04:51

அசோக் நகர், : நள்ளிரவில், காவல் நிலையம் முன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றவனால், பரபரப்பு ஏற்பட்டது.நெசப்பாக்கம், கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், கார்த்திக், 28; பெயின்டர். இவன் மீது, எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்தில், திருட்டு வழக்குகள் உள்ளன.இவனது மனைவி நர்மதா, 25. அசோக் நகர் புதுார், ஐந்தாவது பிளாக்கில் உள்ள, தாய் வீட்டில் வசித்து வருகிறார்.



நேற்று முன்தினம் இரவு, மனைவி வீட்டிற்கு சென்ற கார்த்திக், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டான்.பின், கழுத்தை அறுத்து, அசோக் நகர் காவல் நிலையம் முன் சென்று, மயங்கி விழுந்தான்.இரவு பணியில் இருந்த போலீசார், அவனை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அசோக் நகர் போலீசாரின் விசாரணையில், எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர், கார்த்திக்கிடம், அடிக்கடி மாமூல் கேட்டு மிரட்டி, அடித்ததாக கூறப்படுகிறது.அவர்களின் தொந்தரவு தாங்காமல், தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X