| வட மாநில மண்பாண்ட பொருட்களின் கண்காட்சி Dinamalar
வட மாநில மண்பாண்ட பொருட்களின் கண்காட்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
05:57

சென்னை: வட மாநில மண்பாண்ட பொருட்களின் கண்காட்சி, பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.மத்திய அரசு ஜவுளித்துறையின் கீழ், சி.சி.ஐ.சி., எனும், மத்திய குடிசை கைத்தொழில் நிறுவனம் இயங்கி வருகிறது.



இதன் சார்பில் நெசவாளர்கள், கைவினைஞர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அவர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்தும் வகையில், பல்வேறு இடங்களில் கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில், நந்தனம், டெம்பிள் டவரில் உள்ள, சி.சி.ஐ.சி., வளாகத்தில், வட மாநில மண்பாண்ட பொருட்களின் கண்காட்சியை நடத்தி வருகிறது.இதில், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உ.பி., ஒடிசா போன்ற மாநிலங்களின், கலைநயமிக்க பானைகள், டீ குவளைகள், காபி செட், பீர் மக், பவுல்கள், மேஜை விரிப்புகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.இக்கண்காட்சி நாளை மறுநாள் வரை நடக்கிறது. தினமும் காலை, 10:30 மணி முதல், இரவு, 7:30 வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X