| 'சேவை என வரும் போது செலவு தெரியவில்லை': மக்களின் தாகத்தை தீர்க்கும் வெங்கடேசன் Dinamalar
'சேவை என வரும் போது செலவு தெரியவில்லை': மக்களின் தாகத்தை தீர்க்கும் வெங்கடேசன்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

20 ஜூன்
2019
14:24
பதிவு செய்த நாள்
ஜூன் 20,2019 06:00

பல்லாவரம் : பல்லாவரத்தில், தன் சொந்த செலவில், மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும், வெங்கடேசன் என்பவரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.



கடந்த காலங்களில், சென்னை மாநகரின் மக்கள் நெருக்கடி நிறைந்த, வட சென்னை போன்ற பகுதிகள் மட்டும், குடிநீர் தட்டுப்பாடால், கடுமையாக பாதிக்கப்பட்டன.அப்போது, சென்னையின் புறநகர் பகுதிகளில் இருந்து, குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய நிலைமை, மிக மோசமாக உள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.



தஞ்சம்:


சென்னையை பொறுத்தவரை, தினக்கூலி மற்றும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்வோர் தான் அதிகம். இவர்களின் சம்பாத்தியம் என்பது, அன்றாட தேவைக்கே போதுமானதாக உள்ளது. இவர்களால், அதிக விலை கொடுத்து, கேன் குடிநீர் வாங்குவது என்பது இயலாத காரியம்.அவ்வாறு பணம் கொடுத்தாலும், லாரி தண்ணீர் கிடைப்பதில்லை.நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள், தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியாமல், வீடுகளை காலி செய்வதும், உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைவதும் அதிகரித்துள்ளது.



விஸ்வரூபம் எடுத்துள்ள தண்ணீர் தட்டுப்பாடால், மக்கள், இரவு - பகல் என பாராமல், குடிநீருக்காக வீதி வீதியாக சுற்றி வருகின்றனர்.இங்ஙனம், தண்ணீருக்காக தவிப்போரின் நிலைமையை கண்டு, ஆங்காங்கே, மனிதநேயம் மிக்க சிலர், நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதில், பல்லாவரத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர், தன் சொந்த செலவில், குடிநீரை வாங்கி, தினமும், பொதுமக்களுக்கு, இலவசமாக வினியோகித்து வருகிறார்.



'டோக்கன்' முறை:


பழைய பல்லாவரம், ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், லயன் வெங்கடேசன், 47. பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, சொந்தமாக வாங்கிய லாரியில், தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து, தண்ணீரை வாங்கி, மக்களுக்கு இலவசமாக வழங்கினார். இந்தாண்டு, கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், சீரான முறையில், குடிநீர் வழங்க திட்டமிட்ட வெங்கடேசன், இதற்காக, வீட்டு வாசலில், மூன்று குழாய்களை அமைத்தார்.



தினமும், சோமங்கலம் பகுதியில் இருந்து குடிநீரை வாங்கி வந்து, வீட்டின் கீழ் உள்ள தொட்டியில் சேமித்து, பின், மாடியில் உள்ள தொட்டியில் ஏற்றி, தினமும் காலையில், 6:00 முதல், 8:00 மணி வரை, ஒருவருக்கு, இரண்டு குடங்கள் வீதம், இலவசமாக வினியோகிக்கிறார்.தள்ளுமுள்ளு ஏற்படாமல் தடுக்க, 'டோக்கன்' முறையை கடைப்பிடிக்கின்றனர்.ப



ழைய பல்லாவரம் மட்டுமின்றி, சுற்றுப்புற பகுதி மக்கள், வரிசையில் காத்திருந்து, குடிநீர் பிடித்து செல்வதை பார்க்கும் போது, வெங்கடேசனை மனதார பாராட்டாமல் இருக்க முடியாது.ஒவ்வொரு ஆண்டும், இதை கடைப்பிடித்து வருகிறேன். இந்தாண்டு, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அனைவருக்கும், குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக, குழாய் அமைத்தேன்.



இலவச குடிநீர் குறித்து, எங்கள் பகுதி, 'வாட்ஸ் ஆப் - குரூப்'பில் தெரிவித்தேன். அதை பார்த்து, ஆரம்பத்தில் குறைந்த மக்களே பிடித்து சென்றனர். நாளடைவில் இந்த தகவல் பரவி, தற்போது, 300 பேர் வந்து, குடிநீர் பிடித்து செல்கின்றனர். ஒவ்வொரு நாளும், 3,500 ரூபாய் செலவாகிறது. மக்களுக்கு சேவை செய்கிறோம் என்பதை எண்ணி பார்க்கும்போது, இந்த செலவு பெரிதாக தெரியவில்லை. இளைஞர்கள் இதற்கு ஆர்வம் காட்ட வேண்டும். இதேபோல், ஆழ்துளை கிணறுகளில் நீரூற்று உள்ள வீட்டு உரிமையாளர்கள், பக்கத்து வீடுகளுக்கு, தண்ணீர் வழங்க வேண்டும்.பி.வெங்கடேசன்

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X