இந்த முறை அமைச்சர் பாண்டியராஜனின் சுற்று; செயற்கை மழை பொழிவிக்கப் போகின்றனராம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

20 ஜூன்
2019
14:11
பதிவு செய்த நாள்
ஜூன் 20,2019 06:03

''சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தை போக்க, செயற்கை மழை பொழிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் கூறியுள்ள நிலையில், 'பஞ்சத்தை போக்கும் அளவிற்கான, செயற்கை மழை பொழிவுக்கு, சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு' என, வானிலை ஆய்வாளர்கள், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.சினிமா காமெடிகளை மிஞ்சும் அளவிற்கு, சமீபகாலமாக, தமிழக அமைச்சர்கள், 'வானத்தை வில்லாக வளைப்பேன்; மணலை கயிறாக திரிப்பேன்' என, ஏகவசனம் பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். அமைச்சர், செல்லுார் ராஜூ துவங்கி, ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் என, உளறல் அமைச்சர்கள் பட்டியல், நீண்டு கொண்டே செல்கிறது.இந்த வரிசையில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜனும் இணைந்துவிட்டார் போல...ஆவடி தொகுதியில் நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற, அமைச்சர், பாண்டியராஜன், ''சென்னையில், குடிநீர் பஞ்சத்தை போக்க, செயற்கை மழை பொழிவிப்பதற்கான பணிகளை, அரசு வேகமாக மேற்கொள்ள உள்ளது,'' என, தெரிவித்து உள்ளார். தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாத தற்போதைய சூழலில், தண்ணீர் உள்ள பகுதியில் இருந்து, இல்லாத பகுதிக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை ஏதாவது எடுக்க முடியுமா என பார்க்காமல், இன்னும் ஆய்வு நிலையில் உள்ள, செயற்கை மழையை பொழிய வைத்து, குடிநீர் பஞ்சத்தை தீர்ப்போம் என, அமைச்சர் கூறுவது, சிரிப்பை தான் ஏற்படுத்துகிறது.இந்திய அளவில், செயற்கை மழை என்பது, இன்னமும் உறுதிப்படுத்தப்படாத, பரிசோதனை முயற்சியாகவே உள்ளது.பரிசோதனைஇது குறித்து, வானிலை வல்லுனர் ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மேகங்களை பொருத்தவரை, பனிக்கட்டி மேகங்கள், நீர் மேகங்கள் உள்ளிட்ட, பல்வேறு வகைகளில் உள்ளன.செயற்கை மழை உண்டாக்க வேண்டுமெனில், குறிப்பிட்ட மேகங்களில், வேதிப்பொருட்களை துாவினால் மட்டுமே, மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு, வெப்பநிலை, வேதிக்கலவை, மேகத்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகள், குறிப்பிட்ட அளவில், துல்லியமாக இருக்க வேண்டும்.அதேபோன்று, திட்டமிட்டு, குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மழைப்பொழிவை நிகழ்த்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.அடையாறு பகுதியில், மழை பொழிவை ஏற்படுத்த திட்டமிட்டால், அந்த மேகங்கள், செங்கல்பட்டிலோ, காஞ்சிபுரத்திலோ, வேலுாரில் பகுதியிலோ சென்று கூட, மழையாக பெய்து விடலாம்.செயற்கை மழை உண்டாக்குவதற்கு, அதிகளவில் செலவாகும். கோடிக்கணக்கில் செலவழித்து, அதன் மூலம், எவ்வளவு நீரை பெற போகிறோம் என்பது, முக்கிய கேள்வியாக உள்ளது.இதுபோன்ற முயற்சிகளில், மேகங்கள் மீது துாவப்படும் வேதிப்பொருட்களால், பக்க விளைவுகள் கிடையாது என்பதற்கு, எந்த உத்தரவாதமும் இதுவரை இல்லை.இந்திய அளவில், செயற்கை மழை என்பது, இன்னமும் ஒரு பரிசோதனை முயற்சியாக தான் உள்ளது. 100 சதவீதம் தீர்வுஇதன் மூலம், எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல், எதிர்பார்த்த அளவில், இயற்கையான மழையை போலவே, நமக்கு கிடைக்கும் என, எந்த உறுதிமொழியும் அளிக்க முடியாது.அதனால், இவை எல்லாம், இன்னும் பரிசோதனை முயற்சி தானே தவிர, இதனால் நிச்சயம், 100 சதவீதம் தீர்வு கிடைக்க, வாய்ப்பு மிக குறைவு.செயற்கை மழை திட்டத்தில், வானில் மேகங்களை ஒருங்கிணைத்து, வேதிப்பொருட்கள் துாவும் போது, அதனால் தான் மழை வந்தது என்பதைக்கூட, உறுதியாக சொல்ல முடியாது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.இது குறித்து, தனியார் வானிலை வல்லுனர் ஒருவர் கூறியதாவது:பொதுவாக, செயற்கை மழையில், மேகங்கள் இருந்தால் மட்டும் தான், மழை பொழிவை ஏற்படுத்த முடியும் என, சொல்ல முடியாது.குறிப்பிட்ட காற்றழுத்தத்தில், வேதிப்பொருட்களை துாவினால், அவையே மேகங்களை செயற்கையாக உருவாக்கி, மழை பொழிவை ஏற்படுத்திவிடும்.சென்னையில், இந்த முயற்சியின் போது, எதிர்பார்க்கும் இடத்தில், மழை பொழியாமல் போய்விட்டால், என்ன செய்வது என்ற சந்தேகம் உள்ளது.அதனால், தமிழகம் முழுவதும் கூட, மழை பொழிவை ஏற்படுத்துவது குறித்து, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த செயற்கை முறையால், பக்க விளைவுகளுக்கான வாய்ப்புகள் குறித்தும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.செயற்கை மழைக்கான, செலவை பொருத்த வரை, குடிநீர் வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் இதர திட்டங்களுக்கான செலவை விட, குறைவாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், முயற்சி தோல்வியடைந்தால், பெரும் தொகை இழப்பை சந்திக்க நேரிடும். முயற்சி, 100 சதவீதம் வெற்றி பெறும் என, கூற முடியாது.மிக முக்கியமாக, தேவைக்கேற்ப, பல்வேறு பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது.இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான, சாத்தியங்கள் உள்ளதா என்பது குறித்து, ஆய்வு தான் தற்போது மேற்கொள்ளப்படுகிறது.ஆனால், நிச்சயமாக, செயற்கை மழை பொழிய வைக்கப்படும் என, உறுதியாக சொல்ல முடியாது. கடுமையான காலகட்டங்களில், பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதை போலவே, இதையும் தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.இத்திட்டத்திற்கான சாத்தியங்கள், அனைத்து கோணங்களிலும், அலசி ஆராயப்படும் நிலையில், தேவைப்பட்டால் மட்டுமே, இத்திட்டத்தை செயல்படுத்த வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.கடலில்தான் கலக்கிறது:


இது குறித்து, நீரியல் வல்லுனர் ஒருவர் கூறியதாவது:சென்னையை பொருத்தவரை, பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரி பகுதிகளில், செயற்கை மழை பொழிவை நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டுஉள்ளதாக தெரிகிறது.அப்படி மழை பொழிவை ஏற்படுத்தினால், மிகப்பெரிய அளவில், மழைப்பொழிவை ஏற்படுத்த வேண்டும். அதேநேரம், அந்த மழை பொழிவை, பலகட்டமாக நிகழ்த்த வேண்டும். அப்போது தான், எதிர்பார்த்த அளவில் பலன்கள் கிடைக்கும்.சென்னையில், பெருமழை பெய்தபோது, அந்த நீரெல்லாம் கடலில் சென்று வீணாக, முக்கிய காரணம், அதிகப்படியான மழைப்பொழிவு தான்.ஓரிரு தினங்களில் கொட்டிய அந்த பெருமழையே, 10 - 15 நாட்களுக்கு சீராக பெய்திருந்தால், நிலத்தடி நீர் மட்டம் அதிகளவில் உயர்ந்திருக்கும். பல நாட்களுக்கு மழை பொழிவை ஏற்படுத்தினால், அதற்கு பெரும் தொகை செலவாக வாய்ப்புள்ளது.ஏரிகளை துார்வாரி, நீர் தேக்குவதற்கான கட்டமைப்பு பணிகளை முறையாக மேற்கொண்டிருந்தால், இயற்கையாக கிடைக்கும் மழைநீரை தேக்கி, பஞ்சத்தை போக்கி இருக்கலாம்.அதை விட்டுவிட்டு, இப்போது செயற்கை மழையை உருவாக்கி, அதை தேக்கி வைத்து, சுத்தி கரித்து, பொதுமக்களுக்கு வழங்குவதற்கு, அரசு தீவிரம் காட்டுவது வேடிக்கையே!இவ்வாறு அவர் கூறினார்.மேகங்கள், நீர்த்தி வலைகளை போலவே, வானில் மிதந்து கொண்டு இருக்கும். குறிப்பிட்ட காற்றழுத்தத்தில், நீர்த்தி வலைகளை ஒருங்கிணைத்து, மழையாக பொழிவிப்பது தான் செயற்கை மழை.சில்வர் அயோடைடு, சோடியம் குளோரைடு உள்ளிட்ட, மேகங்களை ஒருங்கிணைக்கும் சில வேதிப்பொருட்களை, விமானம் அல்லது ஹெலிகாப்டர் மூலம் துாவினால், அவை மேகங்களை இழுத்து, இணைத்து, அந்த பகுதியில் மழையாக பொழிவிக்கும்.வானியல் ஆய்வாளர்கள், இதை, 'கிளவுடு சீடிங்' என குறிப்பிடுகின்றனர். அதாவது, மேகங்களில், குறிப்பிட்ட வேதி பொருட்களை விதைத்து, மழையை உண்டாக்குவது என்பது தான், இதன் பொருள்.அப்படி எனில், குறிப்பிட்ட பகுதியில், மேகங்கள் இருந்தால் மட்டுமே, அந்த பகுதியில், மழையை உண்டாக்க வாய்ப்புள்ளது.வானில், செயற்கையாக மேகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. இது போன்ற நடைமுறை சிக்கல்கள், இந்த மழை விவகாரத்தில் உள்ளன.சர்வதேச அளவில், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், செயற்கை மழைப்பொழிவை உண்டாக்கி உள்ளன.இந்தியாவில், தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அந்த முயற்சி எல்லாம், எதிர்பார்த்த அளவிற்கு, நல்ல பலனை அளித்ததா என்பது குறித்து, உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. கர்நாடகாவில் கூட, அரசு சார்பில், இந்த மழைப்பொழிவை உண்டாக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. அதுவும், எந்த அளவிற்கு பலனளிக்க போகிறது என, தெரியவில்லை. இந்நிலையில் தான், தற்போது, தமிழகத்தில் செயற்கை மழை பொழிவிக்க செய்து, குடிநீர் பிரச்னையை தீர்க்க இருப்பதாக, அமைச்சர், பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (27)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமநாதன் நாகப்பன் அதிமுகவை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் ஆனால் நடந்தது என்னவோ பாஜக அரசு தான். அதிமுகவை கையைக் காட்டிவிட்டு தப்பிக்கலாம்னு நினைக்காதீங்க!
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
21-ஜூன்-201903:45:17 IST Report Abuse
 nicolethomson அடக்கடவுளே , கருனாடகவை விட்டுடீங்க , சமீபத்தில் திரு கிருட்டிணபைரேகவுடா என்ற அமைச்சர் கொடியை ஆட்டி துவக்கி வைத்தார் , என்ன என்று தெரியுமா க்ளவுட் சீடிங் எனப்படும் செயற்கை மழையை தூவும் விமானத்தை அன்னார் கொடி பிடித்து துவக்கினார் , அதனால்தானோ என்னவோ நாற்பதுநாளு சதவீதம் மழைப்பொழிவு குறைந்துள்ளது
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
21-ஜூன்-201902:40:00 IST Report Abuse
rajesh thermo col scientist is missing this time......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X