| குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீண் Dinamalar
குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீண்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2019
01:12

திட்டக்குடி: திட்டக்குடியில் தனியார் கேபிள் புதைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும் போது, மூன்று இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் விரயமானது.திட்டக்குடியில் தனியார் கேபிள் புதைக்க பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று தோண்டிய பள்ளம் மூடப்பட்ட நிலையில், திட்டக்குடி அரசு தொடக்கப் பள்ளி, இளமங்கலம் வளைவு உள்ளிட்ட மூன்று இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் தெருக்களில் வழிந்தோடி விரயமானது.இதனால் திட்டக்குடி, தி.இளமங்கலம் பகுதியில் காலையில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து, குடிநீர் வினியோகம் செய்தனர்.பல்வேறு பணிகளுக்காக பேரூராட்சி பகுதியில் பள்ளம் தோண்டுபவர்கள் உரிய அனுமதி பெறாமல் செயல்படுவதால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X