| திருமலை அகரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு Dinamalar
திருமலை அகரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2019
01:23

பெண்ணாடம்: திருமலை அகரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் பாசன மோட்டாரில் தண்ணீர் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பெண்ணாடம் பேரூராட்சி, திருமலை அகரம் கிழக்கு (வார்டு - 14) பகுதியில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவுடைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பராமரிப்பில்லாததால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் விரிசல் ஏற்பட்டது.இதனால் கடந்த 2 வாரங்களாக போதிய அளவு தண்ணீர் தேக்கி, குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. அப்பகுதி மக்கள் பாசன மோட்டாரில் தண்ணீர் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, திருமலை அகரத்தில் பழுதான மேல்நிலை தொட்டியை இடித்து அகற்றி, புதிதாக குடிநீர் தொட்டி கட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X